| ADDED : மார் 01, 2024 12:53 AM
ஈரோடு:''அத்திகடவு - அவினாசி திட்டத்தில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. ஆற்றில், 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டால், செயல்பாட்டுக்கு வரும்'' என, அமைச்சர் முத்துசாமி கூறினார்வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோட்டில் நேற்று முன்தினம் கூறியதாவது:அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை பொறுத்தவரை, அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. பரிசோதனை ஓட்டம் நடத்தி உடைப்புகளை கண்டறிந்து, 1,045 குளங்களுக்கும் தண்ணீர் செல்கிறதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதனால் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் போராட்டம் அறிவிக்கின்றனர். தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியாது. ஆற்றில், 160 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. 400 கன அடி தண்ணீர் வந்தால், அன்று திட்டத்தை துவக்கி வைப்பர். தவிர, உபரி நீர் வரும்போது மட்டுமே திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கனவே போட்ட ஒப்பந்தப்படி செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.