உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்கள்

தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்கள்

அந்தியூர்:அந்தியூர் டவுன் பஞ்.,ல், 18 வார்டுகளில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் டவுன் பஞ்., சார்பில் அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று மட்கும், மட்காத குப்பையை துாய்மை பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர். இவர்களுக்கு, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 22.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 15 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டு, பயன்பாட்டிற்கு நேற்று முதல் கொண்டு வரப்பட்டது. இதற்கான பணியை, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.டவுன் பஞ்சாயத்து தலைவர் பாண்டியம்மாள், துணை தலைவர், பழனிசாமி, வார்டு கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ