உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலையில் கரடிகள் உலா

சாலையில் கரடிகள் உலா

சத்தியமங்கலம் : ஆசனுார் அருகே காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகில், வனப்பகுதியிலிருந்து நேற்று காலை வெளியேறிய இரு கரடிகள், மைசூரு நெடுஞ்சாலையில் சாலையை ஒட்டியும், சாலையோரமும் நடமாடின. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளில் சிலர், இந்த காட்சியை மொபைல்போனில் படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி விலங்குகள், வனப்பகுதி சாலையை கடந்து செல்வது சர்வ சாதாரணமாக நடக்கும். வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் செல்லாமல், கவனமாக இயக்க வேண்டும் என்று, வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி