உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அணையில் மண் எடுக்க பா.ஜ., கடும் எதிர்ப்பு

அணையில் மண் எடுக்க பா.ஜ., கடும் எதிர்ப்பு

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள உப்பாறு அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க, பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சுகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாய பணிகளுக்காகவும், மண்பாண்ட தொழிலாளர்களின் தேவைக்கா-கவும், குளம் குட்டைகளில் வண்டல் மண் எடுக்க, தமிழக அரசு அனுமதி தந்துள்ளது. இதேபோல், தாராபுரம் அடுத்துள்ள உப்-பாறு அணையில் வண்டல் மண் எடுத்தால், அணையின் நீர்-மட்டம் பாசனத்துக்கு செல்லும் வாய்க்காலின் நீர்மட்டத்தை விட கீழாகச் சென்று விடும். அதன்படி வாய்க்காலில் தண்ணீர் செல்-லாது. மேலும், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், குடிநீர் தேவைக்காக வழங்கப்படும் நீர், வண்டல் மண் எடுப்பதன் மூலம், கால்வாய் வழியாக வெளியேற முடியாது. எனவே, உப்-பாறு அணையில் வண்டல் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை