உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீழ்பவானி வாய்க்காலில் மிதந்த முதியவர் சடலம்

கீழ்பவானி வாய்க்காலில் மிதந்த முதியவர் சடலம்

புன்செய்புளியம்பட்டி பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் முதியவர் சடலம் மிதந்தது.பவானிசாகரை அடுத்த தொப்பம்பாளையம்-எரங்காட்டூர் இடையே கீழ்பவானி வாய்க்காலில், 55 வயது மதிக்கத்தக்க,அடையாளம் தெரியாத முதியவர் சடலம் நேற்று மதியம் மிதந்தது.பவானிசாகர் போலீசார் மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐந்தரை அடி உயரத்தில் வெள்ளை நிற சட்டை மற்றும் வெள்ளை வேட்டி அணிந்திருந்தார். யார், எந்த ஊரை சேர்ந்தவர், கொலையா, தற்கொலையா? என போலீசார் விசாரிக்கின்றனர். இறந்தவரின் சட்டை பாக்கெட்டில், 18ம் தேதி காலை, புன்செய் புளியம்பட்டியில் இருந்து பவானிசாகருக்கு பஸ்சில் வந்ததற்கான பயணச்சீட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை