மேலும் செய்திகள்
'ரெட் கார்பெட்' விரிக்கும் 'பெட்'களுக்கான சந்தை
23-Nov-2024
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில், மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை, முறையாக மாநகராட்சி அலு-வலகத்தில் வரும் டிச., 31க்குள் பதிவு செய்து உரிமம் பெற வலி-யுறுத்தப்பட்டுள்ளது. செல்லப்பிராணி (ஒன்றுக்கு), 250 ரூபாய் உரிமத்தொகை; பறவை (ஒன்றுக்கு), 250 ரூபாய் செலுத்த வேண்டும். இதில்லாமல் செல்லப்பிராணிகளை வளர்ப்பது குறித்து பல்வேறு நிபந்தனைகளையும் மாநகராட்சி விதித்துள்-ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:செல்லப்பிராணிகளின் அறையில் போதிய இயற்கை வெளிச்சம், காற்றோட்டம் இருக்க வேண்டும். முறையாக தடுப்பூசி போட்டு, அதற்கான சான்றிதழை பராமரிக்க வேண்டும். கழிவை தனியே கொள்கலனில் சேகரித்து சுகாதார முறைப்படி ஒவ்வொரு நாளும் அப்புறப்படுத்த வேண்டும். நோய் தொற்று ஏற்பட்டால், மாநகர நல அலுவலருக்கு விபரம் தெரிவிக்க வேண்டும். அருகில் வசிப்-பவர்களுக்கு ஆபத்து அல்லது தொல்லை விளைவிக்க கூடாது. பொது மற்றும் தனியார் இடங்களில் கழிவேற்றம் செய்வது கூடாது. பொது இடங்களில் இருப்பிடம் அமைக்க கூடாது. இவ்-வாறு பல்வேறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. டிச., 31க்குள் பதிவு செய்து உரிமம் பெறாவிட்டால், 5,000 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநக-ராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
23-Nov-2024