உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க மா.திறனாளிகளுக்கு அழைப்பு

வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க மா.திறனாளிகளுக்கு அழைப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, 2,000 ரூபாய் வழங்கப்-பட்டு வருகிறது. உதவித்தொகை பெறும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும், தாங்கள் உயிருடன் உள்ளதை உறுதிப்படுத்த வாழ்நாள் சான்-றினை, இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தங்கள் பகுதி வி.ஏ.ஓ.,விடம் உரிய படிவத்தில் கையொப்பம் பெற்று, அடையாள அட்டை நகல், மருத்துவ சான்று நகல், ஆதார் அட்டை நகல், கைபேசி எண், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், தனித்துவம் வாய்ந்த தேசிய அடை-யாள அட்டை நகல் ஆகியவற்றுடன், குடும்பத்தில் யாராவது ஒருவர் நேரில் வந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவ-லகத்தில் வரும், 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை