| ADDED : மார் 20, 2024 02:26 AM
வெள்ளகோவில்:வெள்ளகோவில்,
ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் உமா ரமணன், 29; ஈரோடு மாவட்டம்
மொடக்குறிச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம், 50, என்பவருக்கு
சொந்தமான பஸ்சில் ஐந்து ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றினார்.
பஸ்சில் வள்ளியரச்சல் ரோட்டை சேர்ந்த கோபால், 42, கண்டக்டராக
பணிபுரிந்தார்.உமா ரமணனை வேலையை விட்டு சிவப்பிரகாசம் நிறுத்தி
விட்டதால், கோபாலும் வேலைக்கு செல்லாமல் நின்று விட்டார். இதனால்
ஆத்திரமடைந்த சிவப்பிரகாசம், கோபாலுக்கு போன் செய்து,
உமாரமணனின் ஜாதியை சொல்லி தரக்குறைவாக பேசினாராம். இதையறிந்த
உமாரமணன், சிவப்பிரகாசம் மீது நடவடிக்கை கோரி, வெள்ளகோவில்
போலீசில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் அவர் மீது, வன்கொடுமை
தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.