உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழந்தை கடத்தல் வதந்தி; எஸ்.பி., கடும் எச்சரிக்கை

குழந்தை கடத்தல் வதந்தி; எஸ்.பி., கடும் எச்சரிக்கை

ஈரோடு: ஈரோடு எஸ்.பி., ஜவகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சமீப காலமாக வடமாநிலத்தவர்கள், குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய் காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மக்களிடையே அச்சம், பீதியை உருவாக்கும் எண்ணத்தில், சமூக விரோதிகள் சிலர் இதை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற செய்திகள் குறித்து சந்தேகம் இருந்தால் அல்லது உதவி தேவைப்பட்டால் மாவட்ட காவல் துறை உதவி எண், 94981-01210, 100க்கு அழைக்கலாம். அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களையும் அணுகலாம். வதந்திகளை மற்றவர்களுக்கு பகிரவோ, சமுக வலைத்தளங்களில் பரப்பவோ வேண்டாம். அவ்வாறு செய்தால் அத்தகையோர் மீது கடும் நடவடிக்கை பாயும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை