உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆவணி மாத பிறப்பால் சந்தையில் சில்லறை ஜவுளி விற்பனை துவக்கம்

ஆவணி மாத பிறப்பால் சந்தையில் சில்லறை ஜவுளி விற்பனை துவக்கம்

ஈரோடு;ஈரோடு மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் நேற்று, கனி மார்க்கெட் வாரச்சந்தை நடந்தது. இந்த விற்பனை குறித்து, கனி மார்க்கெட் வாரச்சந்தை ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் தலைவர் செல்வராஜ் கூறியதாவது: கடந்த ஆடி மாதம் கடந்த ஆண்டுகளை போல ஓரளவு சில்லறை விற்பனையும், மொத்த விற்பனையும் நடந்தது. தற்போது ஆவணி மாதம் பிறந்துள்ளதால் முகூர்த்த காலமாக உள்ளது. இதற்கான விற்பனை பெரிய ஜவுளி கடைகளில் அதிகமாகவும், கனி மார்க்கெட் போன்ற பகுதிகளில் ஓரளவு சில்லறை விற்பனையாகவே நடக்கும். மொத்த விற்பனை இன்னும் துவங்கவில்லை. நேற்றைய சந்தையில் வழக்கமான வாரச்சந்தை கடைகள், தெரு ஓர கடைகள், வாகனங்கள், குடோன்களில் மொத்த விற்பனை நடந்தது. தமிழகத்தின் சில மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கான மாநில வியாபாரிகளும் ஓரளவு வந்தனர். சில்லறை விற்பனையாக,துண்டு, பெட்ஷீட், குழந்தைகள், பெரியவர்களுக்கான துணி விற்பனையானது.இன்னும் தீபாவளிக்கு, 70 நாட்களே உள்ளதால் வரும் வாரங்களில் தீபாவளியை நோக்கிய விற்பனைக்கு வியாபாரிகள் தயாராகும் வகையில், இருப்பில் உள்ள துணிகளை கிடைத்த விலைக்கு விற்பனை செய்து, தீபாவளிக்கு தயாராகி வருகின்றனர்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை