உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேர்திருவிழாவுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மாடுகளுடன் வந்த பக்தர்கள்

தேர்திருவிழாவுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மாடுகளுடன் வந்த பக்தர்கள்

காங்கேயம்: சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில் தைப்பூசத் திருவிழா இரண்டாவது நாள் தேரோட்டத்தில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.சிவன்மலையில் உள்ள சுப்ரமணியசாமி கோவில் தைப்பூசத் தேர்த்திருவிழா கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை துவங்கியது, தேர் பக்தர்களால் இழுக்கப்பட்டு சிறிது துாரம் சென்றதும் தெற்கு வீதியில் நிலை நிறுத்தப்பட்டது. திருவிழாவையொட்டி காங்கேயம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் கிராம மக்கள் குழுவாக சேர்ந்துவிரதம் இருந்து, காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். ஒரு சிலர் தங்களின் காங்கேயம் இன காளை மாடுகளை அலங்கரித்து காவடியுடன் கொண்டு செல்கின்றனர். அந்த காளைக்கு பக்தர்கள் பணம் தோரணமாக போட்டு அலங்காரம் செய்துள்ளது பக்தர்களை கவர்ந்துள்ளது. ரூபாய் நோட்டுகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தினர். காவடி குழுவினர் மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, சிவன்மலை பகுதியில் ஆங்காங்கே கூடாரம் அமைத்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கி வருகின்றனர். திருவிழாவையொட்டி சிவன்மலை பகுதியெங்கும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ