உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டி.ஆர்.ஓ., அலுவலகத்தில் தரையில் படுத்து தர்ணா

டி.ஆர்.ஓ., அலுவலகத்தில் தரையில் படுத்து தர்ணா

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகம், புதிய கட்டட வளாகத்தில், டி.ஆர்.ஓ., சாந்தகுமார் அறை முன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். பின் அலுவலக பணியாளர்களிடம் வழங்கிய மனுவில் கூறியதாவது:கடந்த ஜன., 10ல் ஈரோடு தாலுகா நல்லாகவுண்டன்பாளையத்தில் அரசு புறம்போக்கு, ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்ற உத்தரவு பெற்றேன். 8 வார கால இடைவெளி வழங்கிய நீதிமன்றம், அதற்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்படாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு தொடரலாம் என வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர்.இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், மனுதாரர் போராடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற தவறியதால், நான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு வந்த டி.ஆர்.ஓ., சாந்தகுமார், 'விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியளித்தார். இதை தொடர்ந்து அவர் வெளியேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ