உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூட்டுறவு ஊழியர்களுக்கு தபால் வழி பட்டயப் பயிற்சி

கூட்டுறவு ஊழியர்களுக்கு தபால் வழி பட்டயப் பயிற்சி

ஈரோடு: கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு தபால் வழியில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்பு துவங்குகிறது. கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் செந்தில்குமார் அறிக்கை: ஈரோடு முனிசிபல் காலனி, வேலுசாமி வீதியில் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி (டி.கோ ஆப்.,) அளிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் வசதிக்காக, தபால் வழியில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான சேர்க்கை நடந்து வருகிறது. கூட்டுறவு பட்டயப்பயிற்சி பெறாத கூட்டுறவு பணியாளர்கள் இப்பயிற்சியில் சேரலாம். 11ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கூட்டுறவு சங்கங்களில் முறையான பணி நியமனம் பெற்றுள்ள அனைவரும் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் கட்டணம் 7,960 ரூபாய். மேலாண்மை நிலைய அலுவலகத்தில், விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வரும் 23ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 25ம் தேதி முதல் பயிற்சி துவங்கி, 50 வாரம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை