உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரு விபத்தில் இருவர் பலி

இரு விபத்தில் இருவர் பலி

கோபிசெட்டிபாளையம்: திங்களூர் அருகே உள்ள செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சாமியப்பன் (70). சைக்கிளில் சென்ற போது, எதிரே வந்த பைக் மோதியதில் சாமியப்பன் பலியானார். பைக்கை ஓட்டி வந்த ஜெயபிரகாஷ், பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த லோகநாதன் ஆகியோர் காயம் அடைந்தனர். திங்களூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.மற்றொரு விபத்து: நம்பியூர் கெட்டிசேவியூர் சந்தன நகரை சேர்ந்தவர் துரைசாமி. இவர் மொபெட்டில், தனது தாய் பொங்கியம்மாளுடன் (60), நம்பியூர் - கோபி சாலையில் சென்றார். பின்னால் வந்த மினி ஆட்டோ மோதியதில் இருவரும் காயம் அடைந்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பொங்கியம்மாள் இறந்தார். நம்பியூர் இனஸ்பெக்டர் இளங்கோவன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை