| ADDED : மார் 12, 2024 04:49 AM
கோபி,: கோபி கோட்டத்தில், சாலை விபத்து நிவாரண நிதியாக, 474 பேருக்கு, 4.15 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.சாலை விபத்தில் பலியாவோரின் குடும்பத்துக்கு, தமிழக முதல்வரின் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. விபத்தில் சிறு காயத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய்; கொடுங்காயத்துத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய்; பலியாவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதன்படி ஈரோடு மாவட்டம் கோபி கோட்ட பகுதியில், 2019 முதல், 2022ம் ஆண்டு வரை விபத்தில் பாதித்த, 474 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.இதில் பலியான, 361 பேருக்கும், காயமடைந்த, 113 பேர் என, 474 பேருக்கு, 4.15 கோடி ரூபாய் முதல்வரின் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. கோபியை சேர்ந்த அரங்கநாதன், 50, சாலை விபத்தில் பலியானாதால், அவரின் மனைவி வாகேஸ்வரியிடம், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை, கோபி ஆர்.டி.ஓ., கண்ணப்பன் நேற்று வழங்கினார்.