உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம்

மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். ஈரோடு மாவட்டத்தில் மக்கள் பயன்பெறும் வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை, வேளாண் துறை என அனைத்து துறைகளிலும் நடக்கும் திட்டப்-பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மக்களிடம் நலத்திட்ட உதவிகள் தடையின்றி சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டு கொண்டார். டி.ஆர்.ஓ., சாந்தகுமார், மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு, சத்தி-யமங்கலம் வனக்கோட்ட துணை இயக்குனர் குலால் யோகேஷ் விலாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ