உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஹிந்தி தெரியாது போடா என பேசும் தி.மு.க., ஓட்டுக்காக ஹிந்தியில் பிரசார நோட்டீஸ் வெளியீடு

ஹிந்தி தெரியாது போடா என பேசும் தி.மு.க., ஓட்டுக்காக ஹிந்தியில் பிரசார நோட்டீஸ் வெளியீடு

ஈரோடு: ஹிந்தி தெரியாது போடா' என்றும், இரு மொழி கொள்கை பேசும் தி.மு.க.,வினர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வட மாநிலத்தவர் ஓட்டுக்களை பெற, ஹிந்தியில் நோட்டீஸ் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர்.'தமிழ் மொழி, இரு மொழிக்கொள்கை, ஹிந்தி எதிர்ப்பில் உயிர் நீத்தவர்களுக்காக மொழிப்போர் தியாகிகள் நாள்' என கொண்-டாடும், தி.மு.க., ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஹிந்தி உட்பட வடமொழி பேசும் தொழிலாளர்களின் ஓட்டுக்-களை பெற, பல யுக்திகளை கையாள்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில், என்.எம்.எஸ்., காம்பவுண்ட், சின்னமாரியம்மன் கோவில் வீதி, கொங்காலம்மன் கோவில் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, கிருஷ்ணா தியேட்டர் பகுதிகளில் குறைந்தபட்சம், 10 ஆயிரம் வாக்காளர்கள் வரை வடமாநிலத்தவர்கள் உள்ளனர்.இதனால் ஹிந்தி தெரிந்த தி.மு.க.,வினர், இஸ்லாமியர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை அழைத்து சென்று, அப்பகுதிகளில் ஓட்டு சேகரிக்கின்றனர். வடமாநிலத்தவர்களை கவரும் பாணியில் பேசி, அவர்களுக்கான பாதுகாவலர் என்பது போன்று பிரசாரம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், ஹிந்தியில் பிரசார நோட்டீஸ் அச்சிட்டு, வடமாநி-லத்தவர்கள் உள்ள பகுதிகளில் வினியோகித்து ஓட்டு சேகரிக்கின்-றனர்.இதுபற்றி, தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: 'ஹிந்தியை எதிர்க்கிறோம், ஹிந்தி பேச மாட்டோம், ஹிந்தி தெரியாது போடா, தமிழகத்துக்குள் ஹிந்-தியை நுழைய விடமாட்டோம்' என கூறும் தி.மு.க.,வினர், ஹிந்-தியில் நோட்டீஸ் அச்சிட்டு வடமாநிலத்தவர்களிடம் வினியோ-கித்துள்ளனர். இங்கு வசிக்கும் வடமாநிலத்தவர்களில், 70 சத-வீதம் பேர் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, சொந்த குடியிருப்புகள், கடைகள் வைத்துள்-ளனர். அவர்கள் தமிழர்களை விட சிறப்பாக தமிழ் பேசுவர். தமிழை வாசிப்பர். இருந்தாலும், அவர்கள் ஓட்டை பெற ஹிந்-தியில் நோட்டீஸ் அச்சிட்டு வழங்கியது, சர்ச்சையாக உள்-ளது.அந்த நோட்டீஸில், தி.மு.க., தலைவர்கள் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, காங்., தலைவர்கள் சோனியா, ராகுல், இளங்கோவன், திருமகன் ஈவெரா ஆகியோர் படங்கள் இடம் பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளில் காங்., மாநில தலைவர் செல்-வபெருந்தகை, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்-தைகள், ம.தி.மு.க., உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர் படங்கள் இடம் பெறாதது புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இவ்-வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை