உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டாக்டரின் தந்தை பாம்பு கடித்து சாவு

டாக்டரின் தந்தை பாம்பு கடித்து சாவு

ஈரோடு, அறச்சலுார், வடுகபட்டி, சாமிநாதபுரம் தெற்கு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 56; விவசாயி. இவர் மனைவி சித்ரா. இவர்களின் மகன்கள் ஜெயந்த், 28, ஆகாஷ், 24; இவர் பெங்களூர் எச்.டி.எப்.சி, வங்கி மேலாளர். ஜெயந்த் எம்.பி.பி.எஸ். படித்துள்ளார். மேல்படிப்பை வீட்டில் இருந்து படிக்கிறார். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.வீட்டின் பின்புறம் உள்ள கரும்பு தோட்டத்தில் தண்ணீர் எடுத்து விட பாலசுப்பிரமணியம் நேற்று காலை, 6:50 மணிக்கு சென்றார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்தவர், பாம்பு கடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஜெயந்த் முதலுதவி செய்து, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அறச்சலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை