உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓவர் குடியால் டிரைவர் பலி

ஓவர் குடியால் டிரைவர் பலி

பவானி:குருவரெட்டியூர், இலிப்பிலி பகுதியை சேர்ந்த டிரைவர் வடிவேல், 47; திருமணம் ஆனவர். குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு டூவீலரில் நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார். அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு, பைக்கையும் அங்கேயே நிறுத்திவிட்டு படுத்து விட்டார். நேற்று காலை விடிந்தும் எழாமல் கிடந்ததால், அப்பகுதி மக்கள் பார்த்துவிட்டு, அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ