உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மச்சினியை கொன்ற போதை மாமன் கைது

மச்சினியை கொன்ற போதை மாமன் கைது

பவானி:பவானியில் குடும்பத்தகராறை விலக்க வந்த மச்சினியை, கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த மாமனை போலீசார் கைது செய்தனர்.பவானி, மேற்கு தெரு, முத்துமாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த கட்டட தொழிலாளி கலைச்செல்வன், 58; இவரது மனைவி ஜோதிமணி, 55; கடந்த மாதம், 30ம் தேதி தம்பதி இடையே தகராறு நடந்தது. சண்டையை தடுத்த ஜோதிமணி தங்கை கல்பனாவை, கத்தரிக்கோலால் குத்தி கலைச்செல்வன் கொலை செய்தார். மனைவியையும் குத்தினார்.இதையறிந்து திரண்ட உறவினர்கள் கலைச்செல்வனை சுற்றி வளைத்து தாக்கியதில் காயமடைந்தார். பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். குணமடைந்த நிலையில் போலீசார் நேற்று கைது செய்தனர். பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை