உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டி.எஸ்.பி., அலுவலக ஊழியருக்கு நெஞ்சுவலி

டி.எஸ்.பி., அலுவலக ஊழியருக்கு நெஞ்சுவலி

கோபி, ஈரோடு ஆர்.என்.,புதுார் அருகே மாயபுரத்தை சேர்ந்தவர் கார்த்தி, 36; கடந்த, 2017ல் போலீஸ் துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது சத்தி டி.எஸ்.பி., கேம்ப் அலுவலகத்தில் மைக் ஆப்பரேட்டராக உள்ளார். நேற்று காலை பணியில் இருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் சத்தி தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோபி தனியார் மருத்துவமனையில் கார்த்தி சேர்க்கப்பட்டார். கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !