உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வ.உ.சி., ஸ்டேடியத்தில் இன்று நீச்சல் பயிற்சி

வ.உ.சி., ஸ்டேடியத்தில் இன்று நீச்சல் பயிற்சி

ஈரோடு: நீச்சல் கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு என, 12 நாட்கள் சிறப்பு நீச்சல் பயிற்சி வகுப்பு, ஈரோடு வ.உ.சி., மைதானம் நீச்சல் குளத்தில் இன்று துவங்குகிறது.மாவட்ட விளையாட்டு அலுவலர் கருணாநிதி அறிக்கை: ஈரோடு வ.உ.சி., விளையாட்டு மைதான, நீச்சல் குளத்தில், சிறப்பு நீச்சல் பயிற்சி வகுப்பு இன்று துவங்குகிறது. 12 நாட்கள் நடக்கும் பயிற்சி கட்டணம் 600 ரூபாய்.தினம் ஒரு மணி நேரம் பயிற்சியளிக்கப்டும். காலை 6.30 முதல் 10 மணி, மாலை 3.30 முதல் 6.30 மணி வரை ஏதாவது ஒரு மணி நேரத்தை தேர்வுசெய்யலாம். பெண்களுக்கு மாலை 5.30 முதல் 6.30 மணி வரை தனியாக நீச்சல் பயிற்சியளிக்கப்படும். தவிர, போட்டிகளில் பங்கேற்க பயிற்சி கட்டணமாக மாதம் 500 ரூபாய் அல்லது ஆண்டுக்கு 3,000 ஆயிரம் ரூபாய் செலுத்தி பயிலலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ