உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஸ்ரீகுரு இன்ஜி., கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீகுரு இன்ஜி., கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோபிசெட்டிபாளையம்: மாணவர்களின் தொழில் நுட்ப திறமையை மேம்படுத்தவும், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை எளிதில் பெறும் வகையில் கோவை ஸ்ரீகுரு இன்ஜினியரிங் கல்லூரி, பி.எஸ்.என்.எல்., மற்றும் 'கொடிசியா' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே துறை சார்ந்த நவீன தொழில் நுட்பங்களை தெரிந்து கொண்டு, மிகச்சிறந்த வல்லுநர்களாக உருவாக்கவும், எளிதில் வேலைவாய்ப்பு பெறவும், கோவை ஸ்ரீ குரு இன்ஜினியரிங் கல்லூரி நிர்வாகம், பி.எஸ். என்.எல் மற்றும் கொடிசியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியது. கல்லூரி முதல்வர் அன்பு செழியன் முன்னிலையில் நடந்தது. பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் ஹரிபாபு, துணை பொது மேலாளர் சேகர், 'கொடிசியா' தலைவர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை