உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாற்றுத் திறனாளிகள்உதவித்தொகைவழங்கல்

மாற்றுத் திறனாளிகள்உதவித்தொகைவழங்கல்

தாராபுரம்: தாராபுரம் தாலுகாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு தளர்த்தி உதவித்தொகை மற்றும் கல்விக் கடன் வழங்கும் முகாம் நடந்தது.முகாமில், 33 பேருக்கு வயது வரம்பு தளர்த்தி மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டது. 115 மாற்றுத் திறனாளிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது. 92 பேருக்கு மாற்றுத் திறனாளிகள் நல வாரிய அட்டை வழங்கப்பட்டது. 35 பேருக்கு செயற்கை கால் மற்றும் இதர உபகரணங்கள் வழங்க அளவீடு செய்யப்பட்டது.கனரா வங்கி மூலம் 28 மாணவ, மாணவியருக்கு 52 லட்சத்து 23 ஆயிரத்து 500 ரூபாய் கல்விக் கடன் வழங்கப்பட்டது.தாராபுரம் ஆர்.டி.ஓ., அழகுமீனா தலைமை வகித்தார். தாசில்தார் ரத்தினசபாபதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் விக்டர் மரிய ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தேவமனோகரன், துணை தாசில்தார் முருகதாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி