உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தே.மு.தி.க., முப்பெரும் விழா

தே.மு.தி.க., முப்பெரும் விழா

பெருந்துறை: பெருந்துறை, விஜயபுரி கிளை தே.மு.தி.க., சார்பில், கொடியேற்று விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொதுக் கூட்டம் ஆகிய முப்பெரும் விழா கள்ளியம்புதூரில் நடந்தது.பெருந்துறை ஒன்றிய செயலாளர் ராஜலிங்கம் தலைமை வகித்தார். விஜயபுரி செயலாளர் லாரன்ஸ் வரவேற்றார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., சந்திரகுமார், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தெற்கு மாவட்ட செயலாளர் சிவகுமார், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் பர்வேஸ், மாவட்ட பொருளாளர் நமச்சிவாயம், மாவட்ட துணை செயலாளர்கள் கோபால், ஏசையன், மாவட்ட இளைஞரணி செயலாளர் திருமூர்த்தி, ஆசிரியர் பட்டதாரி அணி செயலாளர் தேவேந்திரமாணிக்கம், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் தங்கவேல், தலைமை பொதுக் குழு உறுப்பினர்கள் இளங்கோ, சுஜாதா, மாவட்ட தொண்டரணி செயலாளர் முருகன், ஒன்றிய துணை செயலாளர்கள் தங்கவேல், ஈஸ்வரமூர்த்தி, வெங்கடேஷ், கேப்டன் மன்ற செயலாளர் ரவிகுமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.மகளிர் அணி செயலாளர் சுபாஸ்பரியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ