உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநில கபடி போட்டி சென்னை அணி வெற்றி

மாநில கபடி போட்டி சென்னை அணி வெற்றி

கோபிசெட்டிபாளையம் : வெள்ளாங்கோவிலில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை அணியும், பெண்கள் பிரிவில் கொடைக்கானல் அணியும் வெற்றிப்பெற்றன. கோபி வெள்ளாங்கோவிலில், 'சுகி பிரதர்ஸ்' கபடிக்குழு சார்பில், மாநில அளவிலான கபடி போட்டி மூன்று நாட்கள் நடந்தது. 32 மாவட்ட அணிகள், மூன்று டிபார்ட்மென்ட் அணிகள் பங்கேற்றன. பெண்கள் பிரிவில் 16 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் 'தாய்' சென்னை அணி முதலிடம், தூத்துக்குடி அணி இரண்டாம் இடமும், சென்னை மாவட்ட அணி மூன்றாம் இடம் பிடித்தன. பெண்கள் பிரிவில் கொடைக்கானல் அன்னை தெரஸா அணி முதலிடமும், சேலம் பெரியார் பல்கலைக்கழக அணி இரண்டாம் இடமும், சென்னை கபடி ஸ்டார் அணி மூன்றாம் இடமும் பிடித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி