உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மேயர் தேர்தலில்ஐ.கம்யூ., போட்டி

மேயர் தேர்தலில்ஐ.கம்யூ., போட்டி

ஈரோடு: தமிழக ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஈரோடு மாநகரக் கூட்டம், மாநகரச் செயலாளர் கண்ணன் தலைமையில் நடந்தது.அரக்கோணம் விபத்து, பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பெட்ரோல், டீஸல் விலை உயர்வை கண்டித்தல். தமிழகத்தில் கல்வி, மருத்துவம், விவசாயம் தவிர வேறு எதற்கும் இலவசம் தரக்கூடாது. அனைவருக்கும் இலவச கல்வி வழங்க வேண்டும். கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்.உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மேயர் மற்றும் 60 வார்டு கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிடுவது. மேயர் வேட்பாளராக செயலாளர் ஈ.வி.கே.சண்முகம் போட்டியிட செய்து, வெற்றிபெற செய்வது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை