உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காட்டு பன்றி வேட்டைஐவருக்கு அபராதம்

காட்டு பன்றி வேட்டைஐவருக்கு அபராதம்

அந்தியூர்: கண்ணி வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடிய ஐவருக்கு, தலா 8,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.அந்தியூர், தொட்டகோம்பையை சேர்ந்தவர் திருமூர்த்தி (40); விவசாயி. வனத்தை ஒட்டிய பகுதியில் இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. தோட்டத்துக்குள் புகும் மான், காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் பயிர்களை நாசப்படுத்தி வந்ததால், இவற்றை பிடிக்க மறைவான இடங்களில் கண்ணி வைத்திருந்தார். நேற்று முன்தினம், வைத்திருந்த கண்ணியில் காட்டுப் பன்றி ஒன்று அகப்பட்டது.கண்ணியில் சிக்கிய காட்டுப் பன்றி இறைச்சியை சாப்பிடுவதற்காக, அதே பகுதியை சேர்ந்த மாதேஷ் (23), மாதேவன் (55), சின்ன லட்சுமணன் (40), கோபால் (30), திருமூர்த்தி ஆகியோர், அதைக் கொன்றனர். இறைச்சியை வீட்டுக்கு எடுத்து வந்தனர்.தகவலறிந்த அந்தியூர் ரேஞ்சர் பழனிச்சாமி மற்றும் வன ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு சென்றனர். ஐந்து பேரையும் பிடித்தனர். மண்டல வன அலுவலர் அருண் உத்தரவின்படி, ஐந்து பேருக்கும் தலா 8,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை