உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவர் பேரவை துவக்கம்

மாணவர் பேரவை துவக்கம்

ஈரோடு :ஈரோடு செங்குந்தர் இன்ஜி., கல்லூரியில், முதுகலை கணிப்பொறி பயன்பாட்டியல் மற்றும் முதுகலை மேலாண்மை துறைகளின் சார்பில், மாணவர் பேரவையின் துவக்க விழா நடந்தது. கல்லூரி செயலாளர் சிவானந்தன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அருண் பர்வத்தே வரவேற்றார். கோவை மனித வள மேம்பாட்டு துறை முதுநிலை மேலாளர் அண்ணாத்துரை பேசினார். சங்க உறுப்பினர்களை விரிவுரையாளர்கள் நடராஜன், அஞ்சனகிருத்திகா ஆகியோர் அறிமுகம் செய்தனர். உதவி பேராசிரியர் தங்கவேல், மேலாண்மை துறை தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி