உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனுத்தாக்கல் நேரம் அறிவிக்க மின்சார "பெல்

மனுத்தாக்கல் நேரம் அறிவிக்க மின்சார "பெல்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் உள்ளாட்சித் தேர்தல் மனுத்தாக்கல் துவங்கும் நேரத்தையும், முடியும் நேரத்தையும் அறிவிக்கும் வகையில், மின்சார 'பெல்' பொருத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுத்தாக்கல் நடந்து வருகிறது. 60 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டிய அதிகாரிகள் அலுவலகம் மாநகராட்சி அலுவலகத்திலேயே அமைந்துள்ளன. காலை 11 முதல் மாலை 3 மணி வரை மனுத்தாக்கல் நடக்கிறது. தேர்தல் விதிப்படி மனுத்தாக்கல் துவங்கும் மற்றும் முடியும் நேரத்தை ஒலி எழுப்பி அறிவிக்கும் வகையில், மாநகராட்சி முகப்பு கட்டிடத்தின் மையப்பகுதியில், மின்சார 'பெல்' பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெல் காலை 11 மணிக்கும், மாலை 3 மணிக்கும் அடிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை