உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாராபுரம் நகராட்சியில்அ.தி.மு.க., - தி.மு.க., மனு

தாராபுரம் நகராட்சியில்அ.தி.மு.க., - தி.மு.க., மனு

தாராபுரம்: தாராபுரம் நகராட்சியில் அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.தி.மு.க., சார்பில், நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் சுமதி மற்றும் 30 வார்டுகளுக்கான வேட்பாளர்கள், நகராட்சி அலுவலகம் முன் உள்ள முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து, வேட்புமனுவை தாக்கல் செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அய்யாச்சாமி, சரஸ்வதி, பிரபாவதி, முத்துமதி உட்பட பலர் இருந்தனர்.அ.தி.மு.க., சார்பில், நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் கலாவதி, மற்றும் கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளர்கள், வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். தாராபுரம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி, நகர செயலாளர் காமராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.நகராட்சி தலைவர் பதவிக்கு, தே.மு.தி.க., - காங்கிரஸ், - மார்க்சிஸ்ட், - சுயேச்சை உள்பட எட்டு பேரும், 30 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 184 பேரும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். தேர்தல் விதிமுறையை பின்பற்றாத அதிகாரிகளால், வேட்பு மனு தாக்கலின் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வேட்பு மனுக்கள் வாங்க அதிக நேரமானது. வேட்பு மனு தாக்கல் செய்யும் அறைக்குள், தொண்டர்கள் கும்பலாக செல்ல போலீஸார் அனுமதித்ததால் நேரம் விரயமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை