உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 10 பவுன் நகை, பணம்காங்கேயத்தில் திருட்டு

10 பவுன் நகை, பணம்காங்கேயத்தில் திருட்டு

காங்கேயம்: காங்கேயத்தில் தனியார் மில் மேலாளர் வீட்டில் 10 பவுன் நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டது.காங்கேயம், திருப்பூர் ரோடு, லட்சுமி நகரை சேர்ந்தவர் ரத்தினகுமார். இவர் காடையூரிலுள்ள ஒரு தனியார் மில்லில் மேலாளராக பணிபுரிகிறார். இவரது வீட்டின் முன்பகுதியில் அவருடைய தம்பி வசிக்கிறார். நேற்று முன்தினம் ரத்தினகுமார் கரூரில் உள்ள தனது தாயார் உடல் நிலை சரியில்லாததால், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கரூர் சென்றார்.நேற்று காலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த செயின், மோதிரம் உட்பட பத்து பவுன் நகை, 25 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருட்டு போயிருந்தது. காங்கேயம் போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

baala
செப் 29, 2025 11:19

அரசியல்வாதிகள் எல்லோருக்கும் பதவி ஒன்றே குறி


Moorthy
செப் 29, 2025 10:52

சி பி ஐ விசாரணையே உண்மையை வெளி கொண்டு வரும் ...அண்ணாமலை சொல்வது மிக சரி


Moorthy
செப் 29, 2025 09:59

கவ்வறதெல்லாம் இருக்கட்டும். விஜய் வந்தால் ஆயிரக்கணக்கில் கூடும் இளைஞர்கள், நெரிசலில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கில் கூட ஏன் கலந்து கொள்ளவில்லை? என்ன பயம்? ஏன் த வெ க தொண்டர்கள் அவர்களது தலைவர் போலவே பதுங்கி விட்டனர் ?


மேலும் செய்திகள்



புதிய வீடியோ