உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூர் யூனியனில்தேர்தல் பணியை ஆய்வு

அந்தியூர் யூனியனில்தேர்தல் பணியை ஆய்வு

ஈரோடு: அந்தியூர் யூனியனில் தேர்தல் பணிகளை கலெக்டர் சண்முகம் ஆய்வு செய்தார்.அந்தியூர் யூனியனுக்குட்பட்ட மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், யூனியன் உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் பயன்படுத்தக்கூடிய ஓட்டுப் பெட்டிகள் அந்தியூர் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.இவற்றை, மாவட்ட கலெக்டர் சண்முகம் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். 'தேர்தல் அலுவலர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டுள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் வாக்காளர் பட்டியல், துணை வாக்காளர் பட்டியலை வழங்கி, அதற்குரிய அத்தாட்சியை பெற்றுக் கொள்ள வேண்டும். ஓட்டுப்பதிவின் போது அலுவலர்கள் பாரபட்சமின்றி பணியாற்ற வேண்டும். ஓட்டுப்பதிவு அச்சு, மை, ஓட்டுச்சீட்டு, ஓட்டுப்பதிவுக்கான பொருட்கள் எடுத்து செல்லும் பைகள், அதை சீலிடுவதற்கு உரிய பொருட்களையும், அந்தியூர் யூனியனுக்குட்பட்ட 121 ஓட்டுச்சாவடிகளுக்கும் சரியாக பிரித்து, அனுப்பி வைக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.'ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளையும், தேர்தல் அலுவலர்கள் நேரில் சென்று பார்த்து, அங்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்று சரி பார்க்க வேண்டும். இல்லையெனில் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்' எனவும், உத்தரவிட்டார்.பர்கூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மலைந் பகுதியான ஊசிமலை, துருசனப்பாளையம், தாமரைக்கரை பள்ளிகளையும் பார்வையிட்டார். அங்கு ஓட்டு போட செல்லும் மலைவாழ் மக்களுக்கு போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை செய்து தரவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை