உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மீன் பிடி தடைக்காலத்தால் மார்க்கெட்டுக்கு சரிந்த வரத்து

மீன் பிடி தடைக்காலத்தால் மார்க்கெட்டுக்கு சரிந்த வரத்து

ஈரோடு : தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தற்போது அமலில் உள்ளது. இதனால் ஈரோடு மீன் மார்க்கெட்டுக்கு கடல் மீன்களின் வரத்து குறைந்துள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து மட்டுமே கடல் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. வரத்து குறைந்ததால் விலையும் உயர்ந்தது. மார்க்கெட்டுக்கு நேற்று, 5 டன் மீன் வரத்தானது. அயிலை மீன் கிலோ, 300, மத்தி-ரூ.250, வஞ்சிரம் - ரூ.1,300, விலாங்கு மீன்-ரூ.450 முதல் ரூ.600 வரை, பாறை-ரூ.500, முரல் - ரூ.600, இறால்-ரூ.400 முதல் ரூ.500 வரை, ஊளி-ரூ.450, சங்கரா-ரூ.400, கிழங்கா-ரூ.180, நெத்திலி-ரூ.300க்கும் விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ