மேலும் செய்திகள்
தொடரும் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
18-Nov-2024
திருப்பூர், டிச. 14-தொடரும் வடகிழக்கு பருவமழையால், திருப்பூர் மாவட்டத்தில், விவசாயிகள், மக்கள் மனம் குளிர்ந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் கடந்த அக்., 1 ல் துவங்கி வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அந்த மாதம் பெரும்பாலும் அனைத்து நாட்களிலும் மழை பெய்தது. நவ., மாதம், சில நாட்கள் மட்டுமே மழை பெய்தது. சிறிய இடைவேளைக்குப்பின், நேற்றுமுன்தினம் முதல் மீண்டும் மழை பெய்துவருகிறது.நேற்று காலை, 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் சராசரியாக 48.18 மி.மீ., மழை பதிவானது. அதிகபட்சமாக திருமூர்த்தி அணை (ஐ.பி.,) 138 மி.மீ., - திருமூர்த்தி அணை பகுதியில் 135 மி.மீ.,க்கு மிக கன மழையும்; அமராவதி அணை பகுதியில் 110; மடத்துக்குளத்தில் 90 மி.மீ., க்கு கன மழை பெய்துள்ளது.உடுமலையில், 63 மி.மீ., மூலனுார் - 56, தாராபுரம் உப்பாறு அணை பகுதி - 48, வட்டமலைக்கரை ஓடை - 38.60, வெள்ளகோவில் - 35, நல்லதங்காள் ஓடை - 32, திருப்பூர் கலெக்டர் முகாம் பகுதி - 29, திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக பகுதி - 24, காங்கேயம் - 23.6, குண்டடம் - 22, திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதி - 18, ஊத்துக்குளி - 16.30, பல்லடம் - 16 மி.மீ.,க்கு மிதமான மழை பதிவாகியுள்ளது. திருப்பூர் கலெக்டர் அலுவலக பகுதியில் 14 மி.மீ.,க்கும், அவிநாசியில் 5 மி.மீ.,க்கும் லேசான மழை பெய்துள்ளது.விவசாயிகள் மகிழ்ச்சிதற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால், விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால், அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, அமராவதி அணை, மொத்தம் 90 அடியில், நீர்மட்டம் 87.37 அடியாகவும்; திருமூர்த்தியில், மொத்தம் 60 அடியில், 47.12 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. உப்பாறு அணையில், 12.70 அடிக்கும்; நல்லதங்காள் ஓடையில் 8.01 அடி அளவிலும் நீர்மட்டம் உள்ளது.அக்., மாதம், மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. இதனால், தாராபுரம், அவிநாசி, பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி பகுதி விவசாயிகள், சோளம், நிலக்கடலை, பயிறு உள்ளிட்ட மானாவாரி பயிர் சாகுபடி செய்தனர்.சோளத்துக்கு கை கொடுக்கும்நவ., மாதம் மழை தந்த இடைவெளி, பயிர்களின் வளர்ச்சிக்கு கைகொடுத்தது. இம்மாதம் பெய்துவரும் மழை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் கதிர்விட்டு வளர உதவும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
18-Nov-2024