உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஸ்வஸ்திக் கார்னர் ரவுண்டானா சிக்னல் பழுதால் விபத்து அபாயம்

ஸ்வஸ்திக் கார்னர் ரவுண்டானா சிக்னல் பழுதால் விபத்து அபாயம்

ஈரோடு: ஸ்வஸ்திக் கார்னர் ரவுண்டானாவில், ஒரு மாதத்துக்கும் மேலாக சிக்னல் பழுதடைந்து காணப்படுவதால், விபத்து அபாயம் அதிக-ரித்துள்ளது. ஈரோடு ஸ்வஸ்திக் கார்னர் ரவுண்டா பகுதி வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக சத்தி ரோட்டின் இருவழிகள் (பாரதி தியேட்டர் செல்லும் வழி, மூலப்பட்டறை செல்லும் வழி), மேட்டூர் ரோடு மட்டுமின்றி பார்க்கில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் ஸ்வஸ்திக் கார்னர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல், ஒரு மாதத்துக்கும் மேலாக செயல்படாமல் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தாறுமாறாக சென்று மோதிக் கொள்கின்றனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன், சிக்னலை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை