இரு தரப்பு மோதலில்மூவர் சிறையிலடைப்புபவானி: அம்மாபேட்டை அருகே ஓனக்கல் மேட்டை சேர்ந்தவர் செம்பகவுண்டன், 47; நேற்று முன்தினம் இரவு அம்மாபேட்டை அருகே முளியனுார் பிரிவு டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அங்கு சசி என்பவரிடம் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின் செம்பகவுண்டன் அங்கிருந்து சென்று விட்டார்.இந்நிலையில் சசி, பவித்ரன், சீனிவாசன், பிரபாகரன் ஆகியோரை சேர்த்துக் கொண்டு, செம்பகவுண்டனை தட்டிக் கேட்க சென்றனர். அப்போது ஏற்பட்ட மோதலில் செம்பகவுண்டனின் அண்ணன் மகன் பூபதி, கத்தியால் பவித்ரனை குத்தியுள்ளார். பூபதியை மற்றவர்களும் தாக்கினர்.இதில் காயம்பட்ட பவித்ரன், பூபதி பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்ந்தனர். இதுகுறித்து இரு தரப்பு புகாரின்படி ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. செம்பகவுண்டன், சீனிவாசன், பிரபாகரனை போலீசார், நேற்று கைது செய்து, பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.வேட்பாளர் மீது வழக்குஈரோடு: ஆப்பக்கூடல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வேலம்பாளையம் பிரிவில், திருப்பூர் லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அருணாசலம் தலைமையில், நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெறாமல், மதிய உணவு வாங்கி கொடுத்துள்ளனர். இது, தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் என்று, ஆப்பக்கூடல் போலீசில் நிலைக்குழுவினர் புகார் செய்தனர். இதன் அடிப்படையில், அ.தி.மு.க., வேட்பாளர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஒரே இடத்தில் 6 ஓட்டுச்சாவடிதேர்தல் பார்வையாளர் ஆய்வுகாங்கேயம்: ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உள்பட்ட காங்கேயம் சட்டசபை தொகுதியில் ஓட்டுப்பதிவுக்காக, 295 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் காங்கேயம், வெள்ளகோவில், நத்தகாடையூர், சென்னிமலை பகுதியில் ஏழு இடத்தில், ஒரே வளாகத்தில் ஆறு ஓட்டுச்சாவடி மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஈரோடு தொகுதி தேர்தல் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா, இந்த பூத்களில் நேற்று ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார். கோபியில் சோதனையில்ரூ.2.25 லட்சம் பறிமுதல்கோபி, ஏப். 2-கோபி அருகே தொட்டிபாளையம் பிரிவில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது காரில் வந்த, கோபியை சேர்ந்த மோகன்குமாரிடம், உரிய ஆவணமின்றி, 2.25 லட்சம் ரூபாய் இருந்தது. அதை பறிமுதல் செய்து, தேர்தல் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திக்கிடம் ஒப்படைத்தனர்.