உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேன் தீப்பற்றியதால் பரபரப்பு

வேன் தீப்பற்றியதால் பரபரப்பு

கோபி:கோபி அருகே, ஒர்க் ஷாப்பில் நின்றிருந்த வேனில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோபி அருகே புதுவள்ளியாம்பாளையத்தில் இயங்கும், ஒர்க் ஷாப்பில் வேன் ஒன்று தீப்பற்றி எரிவதாக, கோபி தீயணைப்பு நிலையத்துக்கு நேற்று மாலை, 5:00 மணிக்கு தகவல் கிடைத்தது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஒர்க் ஷாப்பில் டாடா என்ற கன்டெய்னர் வேனின் பின் பகுதி தீப்பற்றி எரிந்தது. உடனே தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனால் வேனின் பின் பகுதி கன்டெயினருக்குள் இருந்த, பிளாஸ்டிக் கிரேடு உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து, தீயணைப்பு துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை