உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமியிடம் சில்மிஷம்; லாட்ஜ் ஊழியருக்கு காப்பு

சிறுமியிடம் சில்மிஷம்; லாட்ஜ் ஊழியருக்கு காப்பு

ஈரோடு: சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட, லாட்ஜ் ஊழியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். திருப்பூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 22. பவானி யில் லாட்ஜ் ஒன்றில் பணிபுரிகிறார். இவர் பவானியை சேர்ந்த, 14 வயது சிறுமியை தனது டூவீலரில் கடத்தி சென்றார். ஊத்துக்குளிக்கு சென்ற போது டூவீலரில் பெட்ரோல் தீர்ந்து போனது. எனவே வாகனத்தை தள்ளி கொண்டு சென்றார். அப்போது, சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பகுதி மக்கள் இருவரையும் பிடித்து வைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பவானி அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் பெற்றோரிடம் புகார் பெற்று, மணிகண்டன் மீது போக்சோவில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ