மேலும் செய்திகள்
கணவர் இறந்த துக்கம்: மனைவி தற்கொலை
19-Oct-2024
மனைவி இறந்த துக்கம்; 74 வயது கணவன் தற்கொலைதாராபுரம், அக். 27-தாராபுரம் அருகே, மனைவி இறந்த துக்கம் தாளாமல், 74 வயது கணவன் தற்கொலை செய்து கொண்டார்.தாராபுரத்தை அடுத்த சலவை தொழிலாளர் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி, 74; இவரது மனைவி இரு மாதங்களுக்கு முன் இறந்தார். மூன்று மகன்களும் வெளியூரில் இருக்கும் நிலையில், பழனிச்சாமி தனியே வசித்து வந்தார். இதனால் மனைவியின் ஞாபகம் மன உளைச்சலில் மூழ்கடித்தது. நேற்று முன்தினம் இரவு, மின்விசிறியில் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை வெகுநேரம் கதவை திறக்காததால், அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியே பார்த்தபோது, துாக்கில் தொங்கியது தெரிந்தது. தாராபுரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
19-Oct-2024