உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேனில் கடத்திய குட்கா பறிமுதல்; 2 பேர் கைது

வேனில் கடத்திய குட்கா பறிமுதல்; 2 பேர் கைது

அந்தியூர், நவெள்ளித்திருப்பூர் அருகே சொக்கநாதமலையூர், காளிபட்டி உள்ளிட்ட இடங்களில், மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். காளிபட்டி பிரிவு அருகில் ஒரு ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். வாகனத்தில் இரண்டு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் இருந்தது. வேனில் வந்த இருவரிடம் விசாரித்ததில், கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடத்தி செல்வது தெரிய வந்தது. இருவரும் காளிபட்டியை சேர்ந்த சிவசக்தி, 50, மணிகண்டபிரபு, 29, என தெரிந்தது. குட்கா பொருட்களுடன் ஆம்னி வேனை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். பவானி ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி