உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு கலை கல்லுாரியில் இளங்கலை வகுப்பு துவக்கம்

ஈரோடு கலை கல்லுாரியில் இளங்கலை வகுப்பு துவக்கம்

ஈரோடு:ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இளங்கலை முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. தி முதலியார் எஜுகேசனல் டிரஸ்ட் நிறுவன தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். கல்லுாரி தாளாளர் பாலுசாமி, முதல்வர் சங்கர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலம் வரவேற்றார். நவரசம் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி துணை முதல்வா செல்வம் சிறப்பு அழைப்பாளராக பேசினார். தொடர்ந்து மாணவ,- மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பேராசிரியர், மாணவ--மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் வணிகவியல் துறைத்தலைவர் இளம்பரிதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை