உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தள்ளுபடி அறிவிப்பால் வரி செலுத்துவது உயர்வு

தள்ளுபடி அறிவிப்பால் வரி செலுத்துவது உயர்வு

ஈரோடு;தமிழகத்தில் அனைத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில், நடப்பாண்டு அரையாண்டு தொடக்கத்தில் முன்கூட்டியே சொத்து வரி செலுத்தினால், 5 சதவீத வரி தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி ஈரோடு மாநகராட்சியிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டில் கூடுதலாக வரி வசூலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: அரசின் இந்த திட்டத்துக்கு ஈரோட்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்தாண்டு பிப்., மாதத்தில், 60 சதவீத வரி மட்டுமே வசூலானது.நடப்பாண்டில், 76 சதவீதத்தை தாண்டியுள்ளது. மேலும் இம்மாத இறுதி வரை அவகாசம் உள்ளது. எனவே நடப்பாண்டு வரி வசூலில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ