உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பனி மூட்டத்தில் மூழ்கிய ஏரி மாநகரிலும் அதிகரித்த பனி

பனி மூட்டத்தில் மூழ்கிய ஏரி மாநகரிலும் அதிகரித்த பனி

அந்தியூர்: அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான புதுப்பாளையம், புது மேட்டூர், சின்னத்தம்பிபாளையம், அண்ணாமடுவு, சங்கராப்-பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நேற்று அதிகாலை, 5:00 மணி தொடங்கி, காலை, 11:00 மணி வரை கடும் பனிப்-பொழிவு காணப்பட்டது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்றோர், முகப்பு விளக்கை எரியவிட்டபடி பயணித்தனர். பனிப்பொழிவுக்கு இடையில் காலை, 9:30 மணிக்கு தொடங்கிய மிதமான மழை, 20 நிமிடத்துக்கும் மேல் நீடித்தது. கடும் பனிப்பொழிவால் அந்தியூரை அடுத்த கெட்டிசமுத்திரம் ஏரி பனிமூட்டத்தால் மூடி ரம்மியமாக காட்சியளித்தது. ஏரிக்கரை ஒருவழிப்பாதை என்பதால், அவ்வழியே சென்ற வாகன ஓட்-டிகள், மிதமான வேகத்தில், பனிமூட்டத்தையும் இதமான குளி-ரையும் ரசித்தபடி சென்றனர். மாநகரிலும்...ஈரோடு மாநகரில் நேற்று அதிகாலை, 3:௦௦ மணிக்கு தொடங்கிய சாரல் மழை, ஒரு மணி நேரத்துக்கு நீடித்தது. ஆனாலும் காலை, 7:௦௦ மணிக்கு கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. புகை மண்டலம் போல் பனி-மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். அரை மணி நேரத்தில் பனிமூட்டம் விலகி இயல்பு நிலை திரும்-பியது. இதனிடையே லக்காபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி-களில் மதியம், 12:௦௦ மணி முதல், 12:30 வரை கனமழை வெளுத்து வாங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ