உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மக்காசோளம், நிலக்கடலை 16க்குள் காப்பீடு செய்யுங்கள்

மக்காசோளம், நிலக்கடலை 16க்குள் காப்பீடு செய்யுங்கள்

ஈரோடு:பெருந்துறை வட்டார வேளாண் உதவி இயக்குனர் கலைசெல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில், நடப்பு காரீப் பருவத்தில் மக்காசோளம், நிலக்கடலை பயிர்களுக்கு காப்பீடு அறிவித்துள்ளனர். மக்காசோளம் ஏக்கருக்கு, 740 ரூபாயில் காப்பீடு தொகை செலுத்தி, 37,000 ரூபாய் வரை இழப்பீடு தொகை பெறலாம். அதுபோல நிலக்கடலை பயிர் ஏக்கருக்கு, 678 ரூபாய் தொகை செலுத்தி காப்பீடு செய்து, 18,700 ரூபாய் வரை காப்பீடு இழப்பீடு பெறலாம். இப்பயிர்களுக்கு காப்பீடு செய்ய வரும், 16ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்