உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

காங்கேயம்: காங்கேயத்தில், 1,500 ஆண்டுகள் பழமையான, பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் உள்ளது. பல்வேறு சமூகத்தினரும் கோவிலுக்கு வருகின்றனர். கோவிலில், 2011 ஆனி மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கோவில் புனரமைக்கப்பட்ட நிலையில், நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கா நிகழ்சி நேற்று காலை காலை முதல் காலயாக பூஜையுடன் துவங்கியது. இன்று மூன்றாம் கால, நான்காம் கால யாக பூஜை நடக்கவுள்ளது.நாளை காலை, 7:00 மணிக்கு ஐந்தாம் காலயாக பூஜையை தொடர்ந்து, 10:00 மணிக்கு மேல் ஸ்ரீதேவி பூ தேவி சமேத பிரசன்ன வெங்கட்ரமணர் சுவாமி, விமானம் மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலையில் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை