உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெரிய மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா பூச்சாட்டுதல்

பெரிய மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா பூச்சாட்டுதல்

ஈரோடு:ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் கோவில், அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் நடப்பாண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழா, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி முன்னதாக பெரிய மாரியம்மனுக்கு, 16 வகை திரவிய அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பூச்சாட்டு விழாவையொட்டி, கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இரவு, 9:௦௦ மணியளவில் பூச்சாட்டுதல் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனுக்கு பல்வேறு வகையான பூக்களை வைத்து வழிபட்டு சென்றனர்.இதேபோல் சின்னமாரியம்மன், நடுமாரியம்மன் கோவில்களிலும் பூச்சாட்டு, வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி