* ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பருத்தி ஏலம் நேற்று நடந்தது. இதில் பி.டி., ரக பருத்தி, 260 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 63.69 ரூபாய் முதல், 68.69 ரூபாய் வரை, 5.87 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.* அந்தியூர், புதுப்பாளையம் ஏல நிலையத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று நடந்தது. கதளி ரகம் கிலோ, 30 ரூபாய்; நேந்திரம் கிலோ, 21 ரூபாய்; பூவன் தார், 460 ரூபாய்; செவ்வாழை தார், 700 ரூபாய்; மொந்தன் தார், 500 ரூபாய்; ரஸ்தாளி தார், 520 ரூபாய் என, 2,௦௦௦ வாழைத்தார் வரத்தாகி, 5.62 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 3,548 மூட்டைகளில், 1.68 லட்சம் கிலோ கொப்பரை வரத்தானது. முதல் தரம் கிலோ, 81.40 ரூபாய் முதல், 86.69 ரூபாய் வரை விற்றது. இரண்டாம் தரம், ௧௬ ரூபாய் முதல், 8௫ ரூபாய் வரை, 1.38 கோடி ரூபாய்க்கு விற்றது.* மொடக்குறிச்சி உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 7,490 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 22.06 ரூபாய் முதல், 23.89 ரூபாய் வரை விற்பனையானது. கொப்பரை தேங்காய், 96 மூட்டை வரத்தாகி, முதல் தரம் கிலோ, 83.10 ரூபாய் முதல், 88.60 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 50.10 ரூபாய் முதல், 71.61 ரூபாய் வரை விற்றது. * திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. வெள்ளகோவில், தாராபுரம், காங்கேயம் உள்பட பல்வேறு பகுதி விவசாயிகள், 107 பேர், 59 ஆயிரம் கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ அதிகபட்சம், 87.16 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ அதிகபட்சம், 59.69 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 43 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.