உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

*கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. தேங்காய் ஏலத்துக்கு, 9,390 காய்கள் வரத்தாகின. ஒரு கிலோ, 22.69 ரூபாய் முதல் 29.96 ரூபாய் வரை விற்றது.கொப்பரை தேங்காய், 612 மூட்டைகள் வரத்தாகின. முதல் தரம் கிலோ, 89.89 ரூபாய் முதல் 93.06 ரூபாய்; இரண்டாம் தரம், ௬௧ ரூபாய் முதல் ௭௭ ரூபாய் வரை விற்றது. எள் ஏலத்துக்கு, 285 மூட்டைகள் வரத்தாகின. கறுப்பு எள் கிலோ, 118.79 ரூபாய் முதல் 136.72 ரூபாய்; சிவப்பு எள் கிலோ, 116.69 ரூபாய் முதல் 132.69 ரூபாய்; வெள்ளை எள் கிலோ, 126.29 ரூபாய் முதல் 126.29 ரூபாய் வரை விற்றது. தேங்காய், கொப்பரை, எள் என அனைத்தும், 52.6௫ லட்சம் ரூபாய்க்கு விற்றது.* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 783 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 89.92 ரூபாய் முதல், 92.50 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 68.39 ரூபாய் முதல், 82.90 ரூபாய் வரை, 35,249 கிலோ கொப்பரை, 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 6,000தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 16.55 - 26.75 ரூபாய் வரை விற்றது. தேங்காய் பருப்பு, 46 மூட்டை வரத்தாகி கிலோ, 75.09 - 87.89 ரூபாய்; எள், 20 மூட்டை வரத்தாகி கிலோ, 122.19 - 140.89 ரூபாய்க்கு விற்றது. இதேபோல் ஆமணக்கு எட்டு மூட்டை; துவரை, 28 மூட்டை; கொள்ளு ஆறு மூட்டை; நரிப்பயிறு ஆறு மூட்டை; உளுந்து இரண்டு மூட்டை வரத்தானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ