உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

* ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதி மற்றும் திருப்பூர், கோவை மாவட்ட கிராமங்களில் இருந்து, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், 45 கிலோ எடையில், 277 காய்ந்த நிலக்கடலை மூட்டை கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 68 ரூபாய் முதல், 71.50 ரூபாய்; இரண்டாம் ரகம், 56 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை, 6.70 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 3,000 காய்கள் வந்தன. ஒரு கிலோ, 56.59 ரூபாய், குறைந்தபட்சம், 56 ரூபாய்க்கும் ஏலம் போனது.* அந்தியூரில் நேற்று நடந்த கூடிய வெற்றிலை சந்தைக்கு, 60 கூடை வெற்றிலை வரத்தானது. ராசி வெற்றிலை சிறியது ஒரு கட்டு, 10 ரூபாய், பெரிய கட்டு, 20 முதல் 35, பீடா வெற்றிலை கட்டு, 20 முதல் 30 ரூபாய், செங்காம்பு ஒரு கட்டு, 5 முதல் 10 ரூபாய் என, 2 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 75 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 170.85 - 198.15 ரூபாய், இரண்டாம் தரம், 75.10 - 187 ரூபாய் என, 2,207 கிலோ கொப்பரை, 3.70 லட்சம் 148 ரூபாய்க்கு விற்பனையானது.* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 165 மூட்டை எள் வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 100.29 - 15௩ ரூபாய், சிவப்பு ரகம், 7௭ - 13௪ ரூபாய், வெள்ளை ரகம், 8௬-115 ரூபாய் என, 12,152 கிலோ எள், 13 லட்சத்து, 68,586 ரூபாய்க்கு விலை போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை